பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி

பள்ளிகள் திறப்பு குறித்தான அரசாணையில் அலட்சியம் ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்? - மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 8:13 PM IST
  • Share this:
மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, '10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்' என்று அரசாணை வெளியிட்ட பிறகு, 50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முடிவு செய்வார்; பாடத்திட்டங்கள் பற்றி முதலமைச்சர் முடிவு செய்வார் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். 'வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும்', 'பெற்றோர் சம்மதக் கடிதம் அவசியம்' என்றும் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் தலையில் போடுகிறது அதிமுக அரசு.

Also read: என்னதான் சார் பண்ணப் போறீங்க? உங்களுக்கே நியாயமா இருக்கா சாரே- தங்கம் தென்னரசு கேள்விபள்ளிகளைத் திறக்கிறோம் என்று அறிவித்து விட்டு


எதற்கு இவ்வளவு குழப்பங்கள்? பல்வேறு துறைகளுக்கு இடையில் முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. இப்படி அவசர கதியில் மாணவர்களைப் பள்ளிக்கு வரச் சொல்வதன் புதிர் என்ன? மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா
பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது; அதிமுக அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.”

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading