கருணாநிதியின் 97வது பிறந்த நாள் - நினைவிடத்தில் மலர்தூவி ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழி , உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

  • Share this:
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 97வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி சிலை கீழுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கும் சிலைக்கு கீழே உள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை சிஐடி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் இல்லம் மற்றும் கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், எனக்கு துறைமுகம் பகுதியைச் சார்ந்த  அசோக்குமார் மகாலட்சுமி மணமக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Also read... ராயபுரத்தில் 3 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - சென்னை அப்டேட்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
Published by:Vinothini Aandisamy
First published: