வெங்காய விலையை கட்டுக்குள் வைக்காவிட்டால் அந்நியப்படுவீர்கள்... மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

வெங்காய விலையை கட்டுக்குள் வைக்காவிட்டால் அந்நியப்படுவீர்கள்... மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
  • News18
  • Last Updated: December 9, 2019, 2:45 PM IST
  • Share this:
வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுக்குள் வைக்கத்தவறினால் மக்களிடம் இருந்து வெகுதூரம் அந்நியப்பட்டு போய்விடுவீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும்பாலானோர் வெங்காயத்தை வாங்குவதை நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதாகவோ, விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்குவங்கம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்க அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கும்போது, இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளார்.இடைத்தரகர்கள் பதுக்குவது போன்ற பிரச்னைகளை ஒரு அரசாங்கம் மனது வைத்தால், உரிய நடவடிக்கை எடுத்து தீர்க்க முடியாதா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெங்காயம் மட்டுமின்றி பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணைய் ஆகியவையும் விலையேறிவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாய விலையில் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also see...
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading