பெரியார் உருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

பெரியார் உருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள்

பெரியாரின் 47-ஆம் ஆண்டு நினைவு நாள், பெரியார் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 • Share this:
  பெரியாரின் 47-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

  இதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பெரியார் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

  இந்நிலையில், தமிழகம் முழுவதிலும், ஆங்காங்கே அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: