• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தன் மீதான அவதூறு வழக்குகளை திசைதிருப்ப அரசு முயற்சிக்கிறது - சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு எதிர்ப்பு

தன் மீதான அவதூறு வழக்குகளை திசைதிருப்ப அரசு முயற்சிக்கிறது - சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு எதிர்ப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கொளரி அசோகன் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தன் மீதான அவதூறு வழக்குகளை திசைதிருப்ப அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கொளரி அசோகன் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிதாக தொடரப்பட்ட 3 வழக்குகள் நீதிபதி சுதா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஸ்டாலினுக்கு எதிராக இந்த அவதூறு வழக்கை தொடர்ந்த சென்னை முதன்மை அமர்வு அரசு வழக்கறிஞர் கௌரி அசோகனிடம் சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. குமரேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Also read... யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

முதலில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கௌரி அசோகனின் பிரமாண வாக்குமூலத்தை பதிவு செய்யப்படவேண்டும், பின்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் சம்மன் அனுப்பும் நடைமுறை, சாட்சி விசாரணை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது இந்த நடைமுறையை மாற்ற அரசு முயற்சிப்பதாக கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: