சுங்கச்சாவடி கட்டணமும் உயர்வு: மக்கள் எவ்வளவு அடிகளைத் தாங்குவார்கள்- மு.க.ஸ்டாலின் கண்டனம்

வங்கிகளில் வட்டி வசூல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இதன் தொடர்ச்சியாக சுங்கச் சாவடிக் கட்டணங்களும் உயர்ந்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டணமும் உயர்வு: மக்கள் எவ்வளவு அடிகளைத் தாங்குவார்கள்- மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
  • Share this:
சுங்கக் கட்டணம் உயர்வுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "மக்களின் வாழ்க்கை குலைந்து கொண்டு இருக்கும்போது இடியை இறக்கியதைப் போல, சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்! எவ்வளவு அடிகளை வேண்டுமானாலும் மக்கள் தாங்குவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also read: சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மேலும், ”ஆழமான புதைக்குழிக்குள் தள்ளப்பட்ட அப்பாவி மக்களை 'பொருளாதார ரீதியாக' வேட்டையாடிக் காயப்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. வங்கிகள் நடத்தும் வட்டி வசூல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இதன்தொடர்ச்சியாக சுங்கச் சாவடிக் கட்டணங்களும் உயர்வு!” என்று கூறிய அவர், ”அன்றாட வாழ்க்கை அசைவின்றி நின்றுவிட்டது. வேலைகள் இல்லை, வருமானம் இல்லை, ஊதியம் இல்லை, சிறுகுறு தொழில்கள் மொத்தமாக முடக்கம், பெரிய நிறுவனங்களில் உற்பத்தி இல்லை. இது வழக்கமான காலமா? மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையோ அனுதாபமோ இல்லையா? என்றார்.


இந்தியப் பொருளாதாரம் (உள்நாட்டு உற்பத்தி) இதுவரை இல்லாத வகையில் மைனஸ் 23.9% பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், ”சாதாரண மனிதன் அடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சி அதைவிட அதிகமானது. மோசமானது. இதனைக் கவனத்தில் கொண்டு அல்லவா அரசாங்கம் செயல்பட வேண்டும்? மாநில அரசும், மக்களுக்கு பொருளாதார உதவிகள், சலுகைகள் வழங்குவதன் மூலமாக துன்ப துயரங்களில் தோள் கொடுத்து உதவிட வேண்டும்! பசியில் வாடும் மனிதனுக்குச் சோறு போடாமல், உன்னிடம் கொஞ்சம் ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறேன் என்கிறார்கள். சுங்கக் கட்டணக் கொள்ளையைச் செய்யாதீர்கள்! பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading