ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TN Assembly Result 2021 : திமுக 159, அதிமுக 75... முதன்முறையாக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்

TN Assembly Result 2021 : திமுக 159, அதிமுக 75... முதன்முறையாக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி சமாதியில் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி சமாதியில் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகிறார்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்துள்ளது

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் மொத்தம் கிடைத்துள்ள 75 தொகுதிகளில் அக்கட்சி மட்டும் 63 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. போடி தொகுதியில் அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நீடித்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் 11 ,000வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி உள்பட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,  மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியடைந்தனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். மேலும்  விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்தார் பிரேமலதா.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். 10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முறையாக தலைவரை தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒரு இடம் கூட பெறவில்லை.

First published:

Tags: DMK, MK Stalin, TN Assembly Election 2021