ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“ஒவ்வொரு நாளும் Watch பண்றேன்.. தந்தையா மகிழ்ச்சியா இருக்கு...” உதயநிதியை பாராட்டித் தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஒவ்வொரு நாளும் Watch பண்றேன்.. தந்தையா மகிழ்ச்சியா இருக்கு...” உதயநிதியை பாராட்டித் தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் - உதயநிதி

மு.க.ஸ்டாலின் - உதயநிதி

mk stalin appreciate udhayanidhi | உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “நான் இப்போது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். பிறந்த வீட்டிற்கு மட்டும் அல்ல வளர்ந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் உதயநிதியை watch பண்ணிட்டிருக்கின்றேன்.

நல்ல செய்திகளும் வருகிறது. கேலி செய்து விமர்சனமும் வருகிறது.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளைவிட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு செங்கல் பிரச்சாரத்திற்கு எந்த அளவுக்கு பயன்பட்டது, மக்கள் மனதில் எப்படி பதிந்தது என்பதை அதிகம் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “திராவிட மாடல், திராவிட மாடல் என இன்று நாம் முழங்கிக் கொண்டு இருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு எப்படி இருக்கிறது என்று வரலாறுகளை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அண்ணா தலைமையில்,கலைஞர் தலைமையில் ஆட்சியில் இருந்த போது செய்யப்பட்ட சாதனைகள், இப்போதைய ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கும் போது அந்த பெயர் சூட்டப்படும் விழாவில் கலந்து கொள்ளாமல் இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று சொன்னவர் அண்ணா. இன்றைக்கு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருத்தர் புழம்பிக் கொண்டிருக்கிறாரே ? அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று தனது பேச்சில் கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Udhayanidhi Stalin