• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தண்ணீர் தட்டுப்பாடு - ஸ்டாலின் தலைமையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்!

தண்ணீர் தட்டுப்பாடு - ஸ்டாலின் தலைமையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அதிமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களை திரட்டி அமைதியான முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தெந்த மாவட்ட தலைநகரங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையே, கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் அணுக்கழிவு மையம் எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: