திண்டுக்கல்: திமுக பிரமுகர் மீது மிளகாய்பொடி தூவி வெட்டிக்கொலை.. 11 பேர் கைது.. நண்பனே கொலைசெய்யத் துணிந்தது எப்படி?

Youtube Video

திண்டுக்கல் அருகே, திமுக பிரமுகர் படுகொலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது, ஊரை விட்டு விரட்டியதுமல்லாமல், ஊரில் குடியேற விடாமல் தடுத்ததால் நண்பரே தனது கூட்டாளிகள் மூலம் படுகொலை செய்துள்ளார். குற்றவாளிகள் 11 பேர் சிக்கியது எப்படி?

 • Share this:
  திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் 38 வயதான சின்னப்பன்.மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு பாஸ்ட்புட் கடையில் பாயா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு காரில் இருந்து 6 மர்ம நபர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் கடையை நோக்கி வந்தனர். அவர்களை சின்னப்பன் கவனிக்காத நிலையில் அவரது முகத்தின் மீது மிளகாய்ப் பொடி துாவியுள்ளது அந்தக் கும்பல்.

  சின்னப்பன் தடுமாறிய நேரத்தில் அரிவாளால் சரமாரியாக அவரது முகத்திலும் தலையிலும் வெட்டி, அருகில் உள்ள ஓடையில் தள்ளி விட்டு அந்தக் கும்பல் தப்பியோடி விட்டது. தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சின்னப்பனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  மேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 26, 2020)  முதற்கட்ட விசாரணையில், சின்னப்பன் மர இழைப்பகம் ஒன்று நடத்தி வருவதும், பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் திமுக சார்பில் மேட்டுப்பட்டி வார்டு கவுன்சிலர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.

   

  மேலும் உள்ளூரில் சில பிரச்னைகளில் அவர் தலையிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர்.

  ஆனால் சம்பவம் நடந்த இடத்தின் அருகே சம்பவ நேரத்தில் நடந்த செல்போன் அழைப்புகள் மற்றும் சிக்னல் அடிப்படையில் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த 32 வயதான ஜார்ஜ், அவரது அண்ணன் பிரான்சிஸ் உள்ளிட்ட 11 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

  கொலை செய்யப்பட்ட சின்னப்பன், கைதான ஜார்ஜ், மற்றும் ஆரோக்கியராஜ் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு ஆரோக்கியராஜுக்கும் ஜார்ஜுக்கும் வீட்டருகே சென்ற சாக்கடை தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. அதில், ஆரோக்கியராஜை ஜார்ஜ் கொலை செய்தார். ஆத்திரமடைந்த சின்னப்பன், ஜார்ஜை தனது எதிரியாக கருதத் தொடங்கியுள்ளார். இருவருக்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மேட்டுப்பட்டியில் நீ இருந்தால் கொலை செய்து விடுவேன் என சின்னப்பன் மிரட்டியதால், ஜார்ஜ் திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையில் குடியேறினார். இரண்டு முறை மேட்டுப்பட்டியில் அவர் குடியேற முயன்றபோது சின்னப்பன் தடுத்து விட்டார்.

  மேலும் ஜார்ஜ் செய்து வந்த தொழில்களில் தலையிட்டு தொழில் செய்ய விடாமல் சின்னப்பன் இடையூறு செய்து வந்துள்ளார். இறுதியாக, ஜார்ஜ் மணல் விற்பனையில் இறங்கினார். அப்போது சின்னப்பன் நண்பர்களுக்கும் ஜார்ஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

  தனது நண்பர்களுக்கு ஆதரவாக நேரடியாக சென்ற சின்னப்பன் ஜார்ஜை மிரட்டியுள்ளார். குடும்பத்துடன் :ஊரை விட்டு விரட்டியதுமில்லாமல், தொழில் செய்ய விடாமல் தடுத்து வந்த சின்னப்பனைக் கொலை செய்ய திட்டமிட்டார் ஜார்ஜ். அதன்படி கடந்த வியாழன் அன்று தனது சகோதரர் பிரான்சிஸ் உள்ளிட்ட 11 பேருடன் சென்று சின்னப்பனைப் படுகொலை செய்துள்ளார் என்கின்றனர் போலீசார். 11 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல் ஒரு கொலையில் முடிய அந்த சம்பவம் இன்னொரு படுகொலையில் முடிந்துள்ளது, மேட்டுப்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  Published by:Vaijayanthi S
  First published: