“வந்தார்கள்... இல்லையென்றார்கள்... சென்றார்கள்...” ஐ.டி ரெய்டு குறித்து துரை முருகன் கருத்து

துரை முருகனின் நண்பருக்கு சொந்தமான குடோன் அது என்று கூறப்படுகிறது. எனினும், வருமான வரித்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

“வந்தார்கள்... இல்லையென்றார்கள்... சென்றார்கள்...” ஐ.டி ரெய்டு குறித்து துரை முருகன் கருத்து
திமுக பொருளாளர் துரைமுருகன்
  • News18
  • Last Updated: April 1, 2019, 8:48 PM IST
  • Share this:
தனது வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தப்பட்டது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே என்று திமுக பொருளாளர் துரை முருகன் கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் துரை முருகனின் வீடு, அவரது மகனுக்குச் சொந்தமான கல்லூரி ஆகிய இடங்களில் சில நாட்களுக்கு முன்னதாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிமெண்ட் குடோன் ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க வசதியாக வார்டு வாரியாக பணம் பிரித்து வைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானது.


Read Also... அமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் ரெய்டு குறித்து வருமான வரித்துறை வாய் திறக்காதது ஏன்?

துரை முருகனின் நண்பருக்கு சொந்தமான குடோன் அது என்று கூறப்படுகிறது. எனினும், வருமான வரித்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக துரைமுருகனின் வீடு, கல்லூரி, அலுவலகம் ஆகிய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு தொடர்பாக பேட்டியளித்த துரை முருகன், “இது முழுக்க முழுக்க அரசியல் கணக்கு. எனது மகனை தோற்கடிக்க வேண்டும் என்று குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

Loading...

துரை முருகனை அடித்தால் மற்றவர்கள் பயப்படுவார்கள் என்று கருதியே ரெய்டு நடத்தப்படுகிறது. வந்தார்கள், இல்லை என்றார்கள்.. சென்றார்கள்” என்று கூறியுள்ளார்.

See... தனியார் சிமெண்ட் கிடங்கில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்! ஐபிஎல் தகவல்கள்:


POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...