எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும் - கே.என்.நேரு சூசகம்

வாக்கு எண்ணிக்கை மையத்தை கே.என்.நேரு பார்வையிட்ட போது..

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை திமுக முதன்மைச் செயலாளர், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே. என் நேரு பார்வையிட்டார்.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 இடங்களில் எண்ணப்பட இருக்கின்றன. கொரோனா பரவல்  தடுப்பு நடவடிக்கையாக வழக்கத்தை விட கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளின் வாக்குகள் - திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் தொகுதிகள் - பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் லால்குடி, மண்ணச்சநல்லூர் தொகுதிகள் - சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும்  துறையூர், முசிறி தொகுதிகள் துறையூர் இமயம் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழ்நாடு காவல் துறை, துணை ராணுவப் படை, சிறப்புக் காவல், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு 24 மணி நேரமும் அளிக்கப்பட்டுள்ளது.  சிசிடிவி கேமராக்களைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி முத்திரையிட்டு, முகவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... இந்தியாவில் ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்நிலையில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை திமுக முதன்மைச் செயலாளர், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு இன்று காலை பார்வையிட்டார். இதையடுத்து அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நமது செய்தியாளர்  கேட்டதற்கு, பேட்டி வேண்டாம் என்று தவிர்த்து விட்டு, "எது நடக்கிறதோ நன்றாகவே நடக்கிறதுஎது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்று கூறி காரில் புறப்பட்டு சென்றார். மேலும், ஒரு வாரத்தில் 3வது முறையாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கே.என்.நேரு பார்வையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: