அதிமுகவில் இணைந்த திமுக விவசாய அணி செயலாளர்

அதிமுகவில் இணைந்த திமுக விவசாய அணி செயலாளர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சின்னசாமி

திமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக இருந்த சின்னசாமி அதிமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

 • Share this:
  1980-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்த சின்னசாமி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக பதவி வகித்துள்ளார். பின்னர் எம்.பி.யாகவும் பதவி வகித்த இவர் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் 2011-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

  திமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக செயல்பட்டு வந்த சின்னசாமி இந்தமுறை அரவக்குறிச்சி மற்றும் மணப்பறை தொகுதியில் சீட்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதியிலும் சீட்டு கிடைக்காததால் அதிர்ப்த்தி அடைந்த சின்னசாமி கரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார்.

  பின்னர் பேசிய சின்னசாமி, “12ஆண்டுகள் வெயிலில் இருந்து இங்கு வந்துள்ளேன். நானும், முதல்வர் எடப்பாடியும் சகோதர்கள். 12 ஆண்டுகள் அறிவாலயத்தில் நன்றாக தான் இருந்தேன். தற்போது தீய சக்திகள் உள்ளே உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியாக முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளார்.

  எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர் அவர் தொடர்ந்து மக்கள் பணியாற்ற முதல்வராக மீண்டும் வருவார். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்”என்றார்.

  சின்னசாமி அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அவர் திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூடி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: