ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’எஸ்எஸ்சி தேர்வுகளில் பிராந்திய மொழிகள் புறக்கணிப்பு.... ஜனநாயகப் படுகொலை’ - கனிமொழி எம்.பி காட்டமான விமர்சனம்!

’எஸ்எஸ்சி தேர்வுகளில் பிராந்திய மொழிகள் புறக்கணிப்பு.... ஜனநாயகப் படுகொலை’ - கனிமொழி எம்.பி காட்டமான விமர்சனம்!

திமுக எம்பி கனிமொழி

திமுக எம்பி கனிமொழி

இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை - கனிமொழி எம்பி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வுகள் (CGL Examination 2022)ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி மாநிலச் செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

  இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்றும் தனது ட்விட்டர் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

  முன்னதாக, நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மத்திய துறைகளில் காலியாக உள்ள 20,000-க்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் 8ம் தேதிக்குள் நிறைவடைய இருக்கிறது. 

  இந்த பணியிடங்களுக்கு, முதற்கட்ட எழுத்துத் தேர்வு(Tier- I), இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்வு (Tier- II)  ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி உத்தேச தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.  இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  22 மொழிகளை இந்திய அரசமைப்பு  அங்கீகரித்த    போதிலும், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும்  எஸ்எஸ்சி தேர்வுகளை நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர் கருத்தை தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி  தனது கண்டனத்தை இன்று பதிவு செய்திருக்கிறார்.

  இதையும் வாசிக்க:  எஸ்எஸ்சி போட்டித் தேர்வுக்கென தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ முயற்சிகள் சில

  முன்னதாக,பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசின் நிதி அமைச்சகம் பரிந்துரைத்தது. அதன்படி, பிராந்திய மொழிகளில் வங்கிப் பணிகளுக்கான  தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

  இதையும் வாசிக்க:  எஸ்எஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

  ஆனால், IT, GST, CBI,IB, ED,CVC போன்ற மத்திய அரசின் முக்கிய துறைகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு பிராந்திய மொழிகளில்  தேர்வு நடத்தப்படுவதில்லை. நாளை மறுநாளுடன்,  CGL தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை முடிவடையும் நிலையில், கனிமொழி எம்பி-ன் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Kanimozhi, SSC