Home /News /tamil-nadu /

தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் எதிராக எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது திமுக தான்.. முதல்வர் ஸ்டாலின்

தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் எதிராக எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது திமுக தான்.. முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin | குஜராத் முதலமைச்சராக இருந்து கொண்டுதானே இப்போது பிரதமராக வந்திருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளை பற்றி நீங்கள் பேசவில்லையா?

  தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் எதிரான எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது தி.மு.க.தான்.என முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் கூறியுள்ளார்.

  நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், குமரி முனையில் 133 அடி உயரத்துக்கு வடக்கு நோக்கி வானுயர அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவச் செய்தார் கலைஞர். சமத்துவத்துக்கு சில சக்திகள் கரிபூச நினைத்தாலும் அதையும் கடந்து திகழ்பவர்.

  மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வேண்டி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன், இதுவரை அந்த நிதி வரவில்லை, எப்போது வருமென்றும் தெரியவில்லை, இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள். ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும், பேரிடர் நிவாரண நிதியும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் எங்கே? இதுக்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது, ஆனா, வணக்கம்னு சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நினைக்கிறீங்க.

  Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி

  தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். மாநில அரசிடம் இவர்கள் விட்டுவைத்துள்ள ஒரே வருவாய் ஆதாரமே பத்திரப்பதிவு மட்டும்தான், அதையும் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என கொண்டு வந்து மாநில நிதியில் கைவைத்து விழுங்கி ஏப்பம் விட பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

  மேலும் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி Union of States என்று சொன்னதுக்கு பிரதமர் மோடி ஏன் கோவித்துக்கொள்கிறார்? அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதைதானே அவர் சொல்கிறார். நீங்களும் குஜராத் முதலமைச்சராக இருந்து கொண்டுதானே இப்போது பிரதமராக வந்திருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளை பற்றி நீங்கள் பேசவில்லையா? இப்போது அதெல்லாம் மறந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

  மேலும் படிக்க: ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்க நினைக்கிறது.. திருமாவளவன் வேதனை!!

  தமிழ்நாட்டு மக்களின் நலனை மனதில் வைத்து நீட் விலக்கு மசோதவை மாநிலச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பினால் நியமனப் பொறுப்பான ஆளுநரை வைத்துக்கொண்டு- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் குரலைப் புறந்தள்ளிடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கனவு தமிழ்நாட்டில் நிச்சயம் பலிக்காது. மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, தமிழ்நாட்டுக்குள் வராமல் தி.மு.க. தடுத்தது.

  அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் எதிர்த்தாங்க. இதை நான் சட்டமன்றத்திலேயே பதிவுசெய்திருக்கிறேன். ஆனால், ‘பச்சைப் பொய்’ பழனிசாமி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது - அவரது கொள்ளை சாம்ராஜ்ஜியத்தைப் பாதுகாத்துக்கத் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக்கொடுத்து - அடிபணிந்து போனார். முதன்முதலில் தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வு எழுத வைத்தது பழனிசாமிதான்! அப்படித்தானே நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் எதிரான எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது தி.மு.க.தான் என்று அவர் கூறினார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: DMK, MK Stalin

  அடுத்த செய்தி