முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் 4 பேர் பலி.. திமுகதான் காரணம்..” இபிஎஸ் குற்றச்சாட்டு

“வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் 4 பேர் பலி.. திமுகதான் காரணம்..” இபிஎஸ் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - இபிஎஸ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டிகள் உயிரிழந்ததற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 4ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டத்தில் சிக்கி மூதாட்டிகள் 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் இந்த சோக நிகழ்வுக்கு திமுக அரசு முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: ADMK, DMK, EPS