சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களின் நிர்வாகிகள் பணியாளர்கள் என ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தனர்.
இந்த விழாவில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு நிதியுதவி வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாள்காட்டியை வெளியிட்டார். மேலும், 1,250 கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள 1,250 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அனைத்து துறையும் வளர வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரிகள். மதத்திற்கு எதிரிகள் அல்ல. தமிழகத்தில் கழக ஆட்சி மலர்ந்ததற்கு பிறகு திருக்கோவிலுக்கு ஏராளமான பணிகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழக இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் 43,000 இந்து கோயில்கள் உள்ளன. தற்பொழுது வரை 3986 பழமையான வரலாற்று கோயில்கள் திருப்பணி மேற்கொள்ள கண்டறியப்பட்டுள்ளது. சமூக சமத்துவம் திகழும் இடங்களாக கோயில்கள் திகழ வேண்டும் ” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Local News, Tamilnadu