• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக என்னுடைய 'B' டீம் - சீமான்

திமுக என்னுடைய 'B' டீம் - சீமான்

சீமான்

சீமான்

முல்லை பெரியாறு அணை விவாகரத்தில் மலையாள நடிகர்கள் பேசுகையில், தமிழ் நடிகர்களும் பேச வேண்டும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மருது பாண்டியர்களின் 220-வது நினைவு நாளை முன்னிட்டு, சின்னப்போருரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

வெறும் 8 நாட்கள் வெள்ளையர்களை எதிர்த்த சிவாஜியை மாவீரன் என்கின்றனர். ஆனால் எம் பெரும் பாட்டனார் மருது பாண்டியர்கள் 8 மாதங்கள் வெள்ளையரை எதிர்த்து போர் புரிந்தார். முன்னோர்களை நினைக்கும் போது திமிரும், பெருமையும் வருகிறது. சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் தனிப்பட்ட முடிவு. ஆனால் அதனை நான் வரவேற்கிறேன்

இஸ்லாம், கிறித்துவம் எங்களுடைய மதங்கள் அல்ல. இந்து சமயம் நாங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் மீது திணிக்கப்பட்டது. தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என்கிறார் எச்.ராஜா. பீகாரில் இருக்கும் இந்துக்கள் தமிழர்களா? நான் என்ன மதமாற்றம் செய்ய வந்த கால்டுவெல்லா?  இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மதம் மாற வேண்டுமென்று நான் சொன்னால் அவர்கள் மாறிவிடுவார்களா? இத்தனை நாள் சொல்லி எனக்கு ஓட்டே போடுவதில்லை.

அமீரின் கோட்பாடு தனி. என்னுடையது தனி. என்னை பற்றிபேச வேண்டிய தேவை இருப்பதால் அமீர் பேசுகிறார்.  இலங்கையில் பிறந்த பிரபாகரனை இங்கு எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ளலாம் என அமீர் கேட்கிறார். அரபியாவில் பிறந்த நபிகளை எப்படி நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்?

Also Read : அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு... மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

திமுக என்னுடைய B டீம். என்னை தான் அவர்கள் பின்பற்றுகின்றனர். இந்துவே இல்லை எனக்கூறும் நான் பிஜேபியின் B டீம். கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் எனக்கூறும் திமுக பிஜேபியின் எதிரியா?

முல்லை பெரியாறு அணை விவாகரத்தில் தமிழ் நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை தொடர்பாக பிரித்வி ராஜ் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பேசுகையில் தமிழ் நடிகர்களும் பேச வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் நடிகர்கள் இல்லை.

பன்வாரிலால் ஆய்வு செய்வதை அப்போது எதிர்த்த திமுக, தற்போது என்ன செய்யப்போகிறது? கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரை ஆளுநர்கள் அமைதியாக இருந்தனர். இந்த அடிமைக்கு அந்த அடிமை பரவாயில்லை என தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: