ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக என்றால் முற்போக்குவாதிகள் நிறைந்த ஓர் அறிவு இயக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக என்றால் முற்போக்குவாதிகள் நிறைந்த ஓர் அறிவு இயக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சர் ஸ்டாலின், கீ. வீரமணி

முதலமைச்சர் ஸ்டாலின், கீ. வீரமணி

"தந்தை சீனிவாசனை போன்று, அவரின் மகன் டி.கே.எஸ்.இளங்கோவனும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவராக திகழ்கிறார்" - முதலமைச்சர் ஸ்டாலின்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கொள்கையை காப்பாற்றுவதற்காக எதையும் இழக்கலாம் எனவும், பதவியை காப்பாற்றுவதற்காக எதையும் செய்ய முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டி.கே.சீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, டி.கே.சீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நூல்களை முதலமைச்சர் வெளியிட, அதை கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

  “குதிரை, யானை பந்தயத்தை அந்தந்த விலங்குகள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கின்றனவா?”- ஜல்லிக்கட்டு வழக்கில் பீட்டாவுக்கு நீதிபதி கேள்வி

  இதையடுத்து, பேசிய முதலமைச்சர், தந்தை சீனிவாசனை போன்று, அவரின் மகன் டி.கே.எஸ்.இளங்கோவனும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவராக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார். சீனிவாசனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழாவில் பங்கேற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், திமுக என்றால் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், முற்போக்குவாதிகள் நிறைந்து காணப்படும் இயக்கம் என குறிப்பிட்டார். மொத்தத்தில் இது ஓர் அறிவு இயக்கம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, DMK