மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு அழைப்பு- தி.மு.க கூட்டணி சிறுபான்மையின கட்சியினர் அதிருப்தி

மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு அழைப்பு- தி.மு.க கூட்டணி சிறுபான்மையின கட்சியினர் அதிருப்தி

அசாதுதீன் ஓவைசி

திமுக சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய மஜ்லீஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இதயங்களை இணைப்போம் என்ற மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அழைக்கப்பட்டிருப்பது திமுக கூட்டணியில் உள்ள சிறுபான்மையின கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

  திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில், வரும் 6ம் தேதி இதயங்களை இணைப்போம் என்ற அரசியல் மாநாடு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. ஸ்டாலின் தலைமை ஏற்கும் இந்த மாநாட்டில், தோழமைக் கட்சிகள் கலந்து கொள்கின்றன. இந்த மாநாட்டிற்கு, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அழைக்கப்பட்டிருக்கிறார்.

  திமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான், ஹைதராபாத்துக்கு நேரில் சென்று மாநாட்டுக்கான அழைப்பிதழை அசாதுதீன் ஓவைசியிடம் வழங்கி இருக்கிறார்.

  இந்த கூட்டத்திற்கு வர அசாதுதீன் ஓவைசி முதலில் ஒப்புக்கொண்டதாகவும், திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் அதிருப்தியில் உள்ளதால், அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: