முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக நேர்காணல் தொடங்கியது: விருப்பமனு அளித்த 1400 பேர் பங்கேற்பு

திமுக நேர்காணல் தொடங்கியது: விருப்பமனு அளித்த 1400 பேர் பங்கேற்பு

அண்ணா அறிவாலையம்

அண்ணா அறிவாலையம்

8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை நடைபெறும் நேர்காணலில் கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு தூத்துக்குடி வடக்கு- தெற்கு, திருநெல்வேலி கிழக்கு- மத்திய தொகுதி, தென்காசி வடக்கு-தெற்கு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு விருதுநகர் வடக்கு-தெற்கு; சிவகங்கை; தேனி வடக்கு, தெற்கு மற்றும் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

திமுகவின் விருப்ப மனு கடந்த 17ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது, இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன, 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Must Read: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவர்களுள் சுமார் 7,000 பேர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் சுமார் 1,400 பேர் அழைக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anna Arivalayam, DMK, MK Stalin, TN Assembly Election 2021