முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று கூடுகிறது

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று கூடுகிறது

 அறிவாலயம்

அறிவாலயம்

மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

திமுக-வின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், திமுக-வின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2019-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, இந்த கூட்டம் தொடர்பாக திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ...

திமுகவின் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு

First published:

Tags: Anbazhagan, Anna Arivalayam, DMK, Election, High level Executive meet, Stalin