திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு பேசுகிறது.இது திமுகவிற்கு அம்னீசியா நோய் உள்ளதையே காட்டுகின்றது என
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் வேலுநாச்சியார் இன் 292 பிறந்தநாள் விழாவில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மணி மண்டபத்தில் அமைந்துள்ள ராணி வேலு நாச்சியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,
கடந்த 2014ல் இருந்து 2021 வரை மருத்துவ இடம் தமிழகத்திற்கு சென்ற இரண்டு மடங்காக அதிகரித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக மக்கள் மேல் 7 வருடங்களாக பிரதமருக்கு அன்பு பாசம் காதல் குறையாமல் இருந்து வருவதாகவும், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு பேசுகிறது.இது திமுகவிற்கு அம்னீசியா நோய் உள்ளதையே காட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.
வேலு நாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம்.
ராஜீவ் காந்தி கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை சட்டபூர்வமான முறையில் நடந்துகொண்டிருக்கிறது, இதில் யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது என்றவர் டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளதாகவும்,
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் மிரட்டல், கொள்ளை : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸின் கோரிக்கை
ராஜேந்திரபாலாஜியை பொறுத்தவரை தங்களது கூட்டணி தலைவர்களில் முக்கியமானவர் என்றும் விரைவில் குற்றமற்றவர் என அவர் நீரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.