Home /News /tamil-nadu /

திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை

மாதிரி படம்

மாதிரி படம்

இதற்காக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திமுக தலைவர் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார் எனவும் மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திமுகவின் உட்கட்சித் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற வகையில் 8க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் உட்கட்சி தேர்தல் நடத்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வரும் சூழலில் கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 22ஆம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுகவின் அமைப்பு தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது..

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொடக்கமாக திமுகவின் முப்பெரும் விழா அமையட்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியிருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை போலவே முழுமையான வெற்றியைப் பெற தற்போது பணிகளை தொடங்கி ஆயத்தமாக, எட்டுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்களை மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, கட்சி பணிகளை சரிவர மேற்கொள்ளாத மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்ற திமுக தலைமை முடிவெடுத்துள்ளது என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதற்காக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திமுக தலைவர் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார், அப்போது யாரெல்லாம் பதவியில் நீடிக்க வேண்டும் யாரை மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச்செயலாளர் பதவி : கனிமொழி உட்பட லிஸ்டில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற வகையில் திருச்சி , தஞ்சாவூர் , விழுப்புரம், நாமக்கல்,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி,  மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களில், 8க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள செங்குட்டுவன் மாற்றப்பட்டு, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் புதிய மாவட்ட செயலாளராகவும், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள இன்ப சேகரன் மாற்றப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் புதிய மாவட்ட செயலாளராகவும், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள மூர்த்தி மாற்றம் செய்யப்பட்டு மாவட்டத்தின் இளைஞர் அணி நிர்வாகியான மயூரா செந்திலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கோவையில் திமுகவின் நிர்வாக ரீதியிலாக இருந்த ஐந்து மாவட்டங்கள் மூன்று மாவட்டங்களாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது இதில் கோவை கிழக்கு வடக்கு மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை முடிவு?

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்திலும் ஒரு சில மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் நான்கு மாவட்ட செயலர்கள் இருந்த நிலையில் தற்போது மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது, அதில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மாற்றப்பட்டு அங்கு இளைஞர் அணி நிர்வாகியான செந்தில் என்பவரை புதிய மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சென்னை, சேலம், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக உள்ள திமுகவின் மாவட்ட செயலாளர்களில் ஒரு சிலரையும் மாற்ற திமுக தலைமை ஆனது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறதாக தகவல் வருகிறது..
Published by:Raj Kumar
First published:

Tags: DMK, DMK cadres, DMK party

அடுத்த செய்தி