ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் திமுக மனு!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி தலைமைச் செயலாளரிடம் திமுக மனு!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி திமுக எம்பிக்கள் ஆர் எஸ் பாரதி மற்றும் வில்சன் ஆகியோர் தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, தமிழக தேர்வாணையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 90 ஆண்டுகள் நடைபெறாத ஊழல் மோசடி டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் நடைபெற்றுள்ளது.

ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  மேலும் வழக்கை விசாரித்து வரும் 3 அதிகாரிகளை இதுவரை மாற்றியுள்ளனர்.

மேலும் டிஎன்பிஎஸ்சி விவகாரம் இரண்டு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்த வழக்கை சிபிஐ இடம் மாற்ற கோரி மனு கொடுத்துள்ளோம், சிபிஐ வசம் மாற்றம் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை தொடர்வோம் என தெரிவித்தார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் திமுகவில் சிலருக்கும்  தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி குற்றச்சாட்டை முன் வைக்கிறது என்ற கேள்விக்கு, யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  முறையாக விசாரிக்க வேண்டும் என்பதால்தான் சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைக்கிறோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TNPSC