திமுக சார்பில் மக்களவை மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்களவை மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுகவின் விருப்பமனு விநியோகம் கடந்த 25-ம் தேதி தொடங்கியது.
25 ஆயிரம் ரூபாய் விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டதுடன், கூட்டணிக் கட்சிகளுக்காக தொகுதிகள் உறுதியானபிறகு அதில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களுக்கான கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்கள் இன்று முதல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெறப்படுகிறது. கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, மேலாளர் பத்மநாபன், துணை மேலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் விருப்ப மனுவை பெற்று கொண்டனர்.
தென் சென்னை தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுக இலக்கிய அணி பொருளாளர் சந்திர பாபு என்பவர் விருப்ப மனு செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். வரும் 7-ம் தேதி வரை இந்த விருப்பமனு தாக்கல் நடைபெற உள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.