அதிமுக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து சூழல் இருந்ததால் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் - திமுக வாதம்

அதிமுக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து சூழல் இருந்ததால் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் - திமுக வாதம்

சென்னை உயர்நீதிமன்றம்.

தொடர்ந்து, சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜராகி வரும் சோமையாஜியின் வாதம் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 2.15 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுக அரசுக்கு பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால் தான் தி. மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏகளுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.

இதையடுத்தி மீண்டும் கூடிய உரிமைக்குழு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது தி. மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ க்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குட்கா பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ,ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ தான் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் குட்கா பொருட்களை உட்கொள்ளவில்லை. பேச்சுரிமை அடிப்படையில், குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் பேரவைக்கு குட்கா கொண்டு சென்றனர்.

முதல்வரை மாற்றக் கோரி 18 எம்.எல்.ஏ க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஒ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இப்படி தொடர்ச்சியாக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால் தான் தி. மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது என வாதிட்டனர்..

சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் ஏ. எல் சோமையாஜி, உரிமைக்குழு தனது முடிவை பேரவையில் சமர்ப்பிக்கும். பேரவை தான் இதில் முடிவெடுக்கும்
ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் குட்கா பொருள் கொண்டு வரவில்லை, எல்லோரும் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர், சட்டத்தால் தடை செய்யப்பட்ட எதையும் அவைக்கு கொண்டு வரக்கூடாது, அதனால் குட்கா வை பேசிச்சுரிமைக்காக தான் கொண்டு வந்தோம் என கூறக்கூடாது..
உரிமைக்குழு முன்பு விளக்கமளிக்க வாய்ப்புள்ள நிலையில், தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை,
தங்கள் தரப்பு அனைத்து வாதங்களையும் உரிமைக்குழு முன்பு சமர்ப்பிக்க உரிமையும், வாய்ப்பும் உள்ளதாகவும் தெரிவித்தார்..

அடிப்படை உரிமை,பேச்சுரிமை நிபந்தனைக்கு உட்பட்டது, அவைக்கு என்று ஒரு மரபு உள்ளது,எல்லோரும் பேரவையில் இஷ்டம் போல் செயல்பட முடியாது,அவர்கள் முன் அனுமதி பெறாமல் குட்கா பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.

Also read... நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது



இந்த அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்கு குறைவு ஏற்பட்டதில்லை. எனவே அவையில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளத்தான் உரிமை மீறல் பிரச்சினை கையில் எடுக்கப்பட்டது என கூறுவதில் அர்த்தமில்லை. அவையின் செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எது வேண்டுமானாலும் உரிமை மீறல் என கருதலாம், சட்டப்பேரவை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜராகி வரும் சோமையாஜியின் வாதம் நிறைவடையாததால்
வழக்கின் விசாரணை நாளை பிற்பகல் 2.15 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: