Home /News /tamil-nadu /

''அதிமுக அரசை குறைகூறி தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பக்கூடாது'' : ஓ. பன்னீர் செல்வம்

''அதிமுக அரசை குறைகூறி தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பக்கூடாது'' : ஓ. பன்னீர் செல்வம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் தமிழகத்திலேயே அதிமுகதான் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற அதிமுக எப்போது முன் களத்தில் நிற்கும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

    பெருமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய அதிமுக அரசை குறை கூறி தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் பகுதியை பார்வையிட்ட ஓ. பன்னீர் செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
    சென்னையில் மிக கனமழை பெய்ததால், பல பகுதிகள் பாதிக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அரசு இன்னும் முழுவீச்சில் நிவாரண பணிகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் எழுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு இப்பொழுது வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிகள் நிலைமைகளை கூர்ந்து கவனித்து கொண்டு வருகிறோம். எப்போதெல்லாம் மக்களுக்கு இயற்கை பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் களத்தில் நின்று அதிமுகவினர் மக்கள் சேவை செய்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் தமிழகத்திலேயே அதிமுகதான் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற அதிமுக எப்போது முன் களத்தில் நிற்கும். முந்தைய அதிமுக அரசை குறை சொல்லி தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பக் கூடாது.

    அரசு இன்னும் விரைவாக தங்களது பணியை துவக்க வேண்டும். இன்னும் பல இடங்களில் நீர் வடியாத சூழல் இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், அரசு ஆய்வு செய்ய வேண்டும். அங்கு கழிவுநீர் கால்வாய், மழை நீர் கால்வாய் இவைகளெல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Published by:Abdul Mushtak
    First published:

    Tags: ADMK, Chennai Rain, OPS

    அடுத்த செய்தி