ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்..? உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா..?

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்..? உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா..?

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக அரசு பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றம் விரைவில் நிகழவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை, கடந்த 2021 மே மாதத்தில் பதவியேற்றபோது 33 அமைச்சர்கள் இருந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் போக்குவரத்துத் துறையில் இருந்து ராஜ கண்ணப்பன் விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் அத்துறையில் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையை வலுப்படுத்தும் வகையில், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி... அமைச்சர் பிடிஆர் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி

குறிப்பாக அதிருப்தியில் உள்ள மூத்த அமைச்சர் ஐ பெரியசாமி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உள்ளட்டோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் டிசம்பர் 2ம் வாரத்தில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cabinet Reshuffle, CM MK Stalin, TN Cabinet, Udhayanidhi Stalin