ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும்: மு.க.ஸ்டாலின் 

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும்: மு.க.ஸ்டாலின் 

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும் எனவும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் உள்ளவராக இருந்தாலும் சரி என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும்: மு.க.ஸ்டாலின்   தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து, உக்ரைனில் சிக்கியிருந்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணிக்காக 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய சிறப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழு இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 1,890 பேரை மீட்டுள்ளனர்.

இறுதியாக நேற்றிரவு வந்துசேர்ந்த 9 மாணவர்களுடன் தமிழ்நாடு அரசின் சிறப்புக்குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராச்சாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் டெல்லியிலிருந்து நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

மேலும் படிக்க: உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க குழு அமைக்கப்பட்டது.

உக்ரைனில் இருந்து மாணவர்கள், தமிழர்கள் என 2 ஆயிரம் பேரை மீட்டு வந்துள்ளோம். தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக அரசு அவர்களை காப்பாற்றும்.

மேலும், தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும் எனவும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் உள்ளவராக இருந்தாலும் சரி என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

First published:

Tags: DMK, MK Stalin, Russia, Russia - Ukraine