ரேஷன் கடையில் குடும்ப தலைவிகளுக்கு ₹1000 ரூபாய் எப்போது கிடைக்கும்? அமைச்சர் கொடுத்த ஹேப்பி நியூஸ்

மாதிரிப்படம்

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • Share this:
    முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

    திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிபடிப்பயாக நிறைவேற்றப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையில் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திட்டம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுவது.

    திமுக ஆட்சிக்கு வந்த உடன் ரூ.4000 நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணிகள் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. அடுத்தப்படியாக மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்முறைப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே பலர் புதிய ரேஷன் கார்டு மற்றும் குடும்ப தலைவராக பெண்ணை மாற்றம் செய்து ஏகப்படட்ட கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூரில் செய்தியார்களிடம் பேசினார்.

    அப்போது, "தமிழகத்தில் குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இனி ஆந்திர மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகள் தமிழ்நாட்டில் நுழையவே கூடாது, நுழைவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: