Home /News /tamil-nadu /

கருத்துரிமை பறிப்பு: திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டம்!

கருத்துரிமை பறிப்பு: திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டம்!

கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமையை பறிக்கும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திமுக அரசு கருத்துரிமையை பறிப்பதாக கூறி பாஜகவினர் வாயில் கருப்பு துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் தமிழ்நாடு முழுவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக திமுக அரசு அடக்குமுறை செய்வாத கூறி, அதை கண்டித்து கருப்பு துணி கட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அதன்பின் செய்தியாளரிடம் பேசிய ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார், தமிழக பாஜகவை சேர்ந்த தொண்டர்களை 18 க்கும் மேற்பட்டவர்களை வழக்கு பதிவு செய்துள்ளனர் இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    தமிழக காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது ஆளும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

    இப்போது நடைபெற்றது முதல் கட்ட போராட்டம் மட்டுமே. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதுபோல் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை தொடரும் பட்சத்தில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனையில் வலைப்பதிவு செய்பவர்களையும் தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டால் எங்கள் மாநிலத் தலைவரின் ஆலோசனையோடு அடுத்த கட்ட போராட்டம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

    Also read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பா.ம.க எம்.எல்.ஏக்கள்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, DMK

    அடுத்த செய்தி