ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக ஆட்சிக்கு சட்டம் தெரியாது.. அவர்கள் சினிமா கூத்தாடிகள்: சுப்பிரமணியன் சுவாமி

திமுக ஆட்சிக்கு சட்டம் தெரியாது.. அவர்கள் சினிமா கூத்தாடிகள்: சுப்பிரமணியன் சுவாமி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பேரறிவாளன் விடுதலையானது சிறையில் இருந்துதான், குற்றத்தில் இருந்து அல்ல. பேரறிவாளன் விடுதலையில் சதி நடந்துள்ளது என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திமுக ஆட்சிக்கு சட்டம் தெரியாது என்றும் அவர்கள் அனைவரும் சினிமா கூத்தாடிகள் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, தமிழக அரசுக்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சினிமா கூத்தாடிகள் என்று தெரிவித்தார்.  பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதையும் படிக்க: பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம் - சுப்பிரமணியன் சுவாமி

தொடர்ந்து பேசிய அவர், பேரறிவாளன் விடுதலையானது சிறையில் இருந்துதான், குற்றத்தில் இருந்து அல்ல. பேரறிவாளன் விடுதலையில் சதி நடந்துள்ளது என நினைக்கிறேன். மத்திய அரசின் கருத்து என்ன என்று உச்ச நீதிமன்றம் மூன்றுமுறை கேட்டது. மனுவை தாக்கல் செய்யவும் கூறியது. ஆனால் நமது அரசாங்கம் செய்யவே இல்லை.

' isDesktop="true" id="747838" youtubeid="kh2ivaG5_Xc" category="tamil-nadu">

பேரறிவாளனின் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம். அந்த தவற்றை ஆதாரமாகக் கொண்டு பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. அரசியல் சாசன பிரிவு 142 யை இந்த விவகாரத்தில் பயன்படுத்த முடியாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி என்ற ஒன்றே இல்லை. ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவரை தலைவராகக்காமல் வெளியாளை தலைவராக நியமித்தால் தமிழ்நாட்டில் பாஜக எவ்வாறு வளரும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

First published:

Tags: DMK, Perarivalan, Subramanian Swamy