திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்வு இம்மாதம் 29-ம் தேதி நடைபெறவுள்ளது.
திமுக பொதுச் செயலாளராக கடந்த நாற்பது ஆண்களுக்கும் மேல் இருந்த பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 7-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அந்தக் கட்சி தற்போது புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யவுள்ளது.
அந்தக் கட்சியின் பொதுக்குழு எதிர்வரும் மார்ச் 29-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலையத்தில் நடைபெறவுள்ளது. திமுகவின் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான அந்த கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.
திமுக பொருளாளராக உள்ள துரை முருகன் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.