மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள அரசும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளிலும், மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அரக்கட்டளை சார்பில் ரூபாய் 1 கோடி வழங்குவதாக திமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டுபோயுள்ளனர். ஆயிரக்கணக்கானேர் வீடிழந்து உள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் வகையில் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை திமுக வின் செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.