ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்

துரைமுருகன்

துரைமுருகன்

தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. இதன் இரண்டாவது பகுதி ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் பல்வேறு துறைகளின் கீழ் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷின் பேச்சை ரசித்துப் பார்த்த உதயநிதி ஸ்டாலின்!

இதன் காரணமாக இன்று அவை நடவடிக்கையில் துரைமுருகன் பங்கேற்கவில்லை. இதனிடையே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

First published:

Tags: DMK, Durai murugan, MK Stalin