TN Election Results 2021 : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு

TN Election Results 2021 : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு

துரைமுருகன்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரம் காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

  • Share this:
    காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.

    திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

    இரண்டாவது சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிராமனை விட 848 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.

    திமுக கூட்டணி 112 தொகுதியில் முன்னணி அதிமுக கூட்டணி 83 இடங்களில் முன்னணி வகிக்கின்றது.

    கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.

    Must Read : Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு நிலவரம்

    எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி இரண்டாம் சுற்று முடியில் முன்னிலை. 5,847 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சம்பத் குமாரை விட முன்னிலை பெற்றுள்ளார்.

    கோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றுள்ளார். விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: