• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுங்கள்’:மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

‘வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுங்கள்’:மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காலை 10  மணிக்கு  திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மாற்றுக் கட்சி தோழர்களுடன் இணைந்து தங்கள் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று துரைமுருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.

  • Share this:
    மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பாஜக அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதிவரை பல்வேறு போராட்டங்களை நடத்த ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன்படி திமுக தலைமையில் அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பிலும் தமிழகத்தில் வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள அவர், “ அன்றைய தினம் காலை 10  மணிக்கு  திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மாற்றுக் கட்சி தோழர்களுடன் இணைந்து தங்கள் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் காணொலி காட்சி வாயிலாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: வீரமணி வீட்டில் கிடைத்தது என்ன?


    19 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில்,பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து - செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது,  மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: