ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு! தலைவராக ஸ்டாலின்! திமுக பொதுக்குழு நியமன விவரம்!

திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு! தலைவராக ஸ்டாலின்! திமுக பொதுக்குழு நியமன விவரம்!

கனிமொழி - மு.க.ஸ்டாலின்

கனிமொழி - மு.க.ஸ்டாலின்

ஏற்கனவே துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அவரது பதவியில் இருந்து விலகியதையடுத்து, கனிமொழி கருணாநிதி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. அறிவிக்கப்பட்டார். 

  சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

  இதில், திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  தொடர்ந்து திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

  தொடர்ந்து திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ்,  மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  கூடுதலாக கனிமொழி எம்.பி. துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  ஏற்கனவே துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அவரது பதவியில் இருந்து விலகியதையடுத்து, கனிமொழி கருணாநிதி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

  செய்தியாளர்: பிரகாஷ் பாண்டியன்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Assembly, CM MK Stalin, DMK, DMK party, Kanimozhi, MK Stalin