கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்த விவகாரம்! கேள்வி எழுப்பும் அ.தி.மு.க, தே.மு.தி.க

தி.மு.க அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா 20 கோடி அளவுக்கு பணம் வழங்கியிருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்த விவகாரம்! கேள்வி எழுப்பும் அ.தி.மு.க, தே.மு.தி.க
அறிவாலயம்
  • News18
  • Last Updated: September 30, 2019, 9:17 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க நிதி அளித்தது தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்திய நிலையில், என்ன நடந்தது என தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். ஆனால், பிரேமலதாவிடம் விளக்க அவர் என்ன ஐ.டி ஆபிசரா என தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தேர்தல் நிதி அளித்ததாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "தி.மு.க அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா 20 கோடி அளவுக்கு பணம் வழங்கியிருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.Minister jayakumar | அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக
அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக


இதனிடையே, பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஆதாரப்பூர்வமாக தெரியாமல் எதையும் நாம் பேசிவிடக் கூடாது என்பதால், இது குறித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால், பிரேமலதா விஜயகாந்துக்கு ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டியில், திமுகவிடமிருந்து வங்கி மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் தான் நிதி பெற்றதாகவும், தேர்தல் செலவு தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்போது இது தெளிவாகும் என்றும் கூறியுள்ளார்.

Also see:

First published: September 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...