Home /News /tamil-nadu /

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தி.மு.க பிரமுகரின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தி.மு.க பிரமுகரின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள்

பொள்ளாச்சி வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பார் நாகராஜ் மற்றும் தி.மு.க நிர்வாகியின் மகன் ஒருவருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது.

இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்த பொள்ளாச்சி கொடூர சம்பவம் தொடர்பாக, திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அ.தி.மு.க பிரமுகர் பார் நாகராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த 4 பேரும் தற்போது ஜாமினில் உள்ளனர். நேற்று ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில்,  இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பார் நாகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 28-ம் தேதி பார் நாகராஜ், கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.  இதேபோன்று தி.மு.க கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இவரும் வரும் 28-ம் தேதி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இதனிடையே, பொள்ளாச்சி வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சி.பி.ஐக்கு உத்தரவிடக் கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையை சி.பி.ஐக்கு பரிந்துரைத்த மாநில அரசின் அரசாணையில் பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகள் பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Pollachi, Pollachi sexual harassment

அடுத்த செய்தி