Home /News /tamil-nadu /

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு - துரைமுருகன்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு - துரைமுருகன்

துரைமுருகன்

துரைமுருகன்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. நாளையும் , நாளை மறுதினமும் (டிசம்பர் 16, 17) என இரண்டு நாட்கள் இந்த போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும் பாஜக அரசின் செயலைக் கண்டித்து 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செய்யும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் நியாயங்களை, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்து எடுத்துக்கூறியதைக் கருத்தில்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை வழங்குகிறது.

    கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் - பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை.

    உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.

    நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவினையும் - அதுதொடர்பாக அவசர அவசரமாகக் கொண்டுவரும் வங்கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து 9 இலட்சம் வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Also read: வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் - நாளை முதல் ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் அபாயம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Duraimurugan

    அடுத்த செய்தி