கருணாநிதிக்குப் பிறகு தலைமையுடன் ஒத்துப்போகவில்லை - பா.ஜ.கவில் இணைந்த தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்.

கருணாநிதிக்குப் பிறகு தலைமையுடன் ஒத்துப்போகவில்லை - பா.ஜ.கவில் இணைந்த தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம்
பா.ஜ.கவில் இணையும் கே.பி.ராமலிங்கம்
  • Share this:
திமுக-விலிருந்து முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம்
திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டார். இன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பா.ஜ.கவில் இணையவுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, கே.பி.ராமலிங்கம்  வருகையால் திமுக பலம் இழந்து, பாஜகவின் பலம் கூடியிருப்பதாக கூறினார். அவரை முழுமனதோடு வாழ்த்தி வரவேற்கிறோம் என்றார்.


தொடர்ந்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், எம்.எல்.ஏ, எம்.பி என பல்வேறு நிலையில் தன்னுடைய அரசியல் பணியை தொடர்ந்த கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இவரின் வருகை எங்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கிறது என்றார்.

ரஜினி அமித்ஷாவை சந்திப்பது குறித்து எங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என்ற அவர், அரசு நிகழ்ச்சிகளிலும், பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். இதை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை என்றார்.

முன்னதாக பேசிய கே.பி.ராமலிங்கம், பா.ஜ க வளர்சிக்காகவும், பா.ஜ.கவினருக்காகவும் உழைப்பேன். எனக்கும் திமுக தலைமைக்கும் சரியாக ஒத்து போகாத சூழலில், கருணாநிதிக்குப் பிறகு வேறு யாரையும் தலைவராக ஏற்று கொள்ள கூடிய மன பக்குவம் எனக்கு இல்லாத காரணத்தால் 8 மாத கால இடைவெளிக்கு பிறகு திமுகவின் பழைய நினைவுகளை மறந்துவிட்டு சாதாரண தொண்டனாக இன்று பா.ஜ.கவில் இணைந்துள்ளேன்.எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியிடம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இன்று தேசிய கட்சியில் என்னை இணைத்துள்ளேன் என்றார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading