குட்கா விவகாரம்: புதிய உரிமை மீறல் நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக ரிட் மனு தாக்கல்..

குட்கா பொருட்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

குட்கா விவகாரம்: புதிய உரிமை மீறல் நோட்டீஸ்: சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக ரிட் மனு தாக்கல்..
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 10:08 AM IST
  • Share this:
கடந்த 2017-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸ் மீது தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், வேண்டுமானால் புதிய நோட்டீஸை அனுப்பி விசாரிக்கலாம் என தெரிவித்தனர். அதன்படி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு கடந்த 7-ஆம் தேதி 21 பேருக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.Also read: திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்


பேரவை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதை தடுக்க இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading