ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்காததை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சில இடங்களில் எண்ணிக்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ள இடங்களில் மட்டும்
முடிவுகள் அறிவிக்கப்படாததாக கூறி திமுக சார்பில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி , சங்ககிரி, மேட்டூர் மற்றும் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் முடிவுகளை வெளியிடாததால், நீதிமன்றம் தலையிட வேண்டும் என திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இது தொடர்பாக தாக்கல் செய்யும் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
முறையீட்டை கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற புதிய விதிமுறைகள்படி இன்றே அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும், மனுவாக தாக்கல் செய்தால் நாளை வழக்கை விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.