உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனு

அண்ணா அறிவாலயம்
- News18
- Last Updated: December 4, 2019, 12:57 PM IST
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் ஊராக உள்ளாட்சிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும், வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்து தேர்தலை நடத்தக் கோரி, திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பணிகளை முழுமையாக முடிக்காமல்வெளியிடப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் திமுக கோரியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் நிலையில், திமுகவின் புதிய மனுவும் நாளை எடுத்துக்கொள்ளபடும்.
Also see...

Loading...
Loading...