Home /News /tamil-nadu /

மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளித்துள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு மாணவர் சேர்க்கையில், அரசுக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3.8 சதவீத இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதேபோல, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    Also read... உதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள் - மாவட்ட ஆட்சியர் விளக்கம்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: OBC Reservation

    அடுத்த செய்தி