முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாய் செலவா?'' ஈரோடு இடைத்தேர்தல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

''எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாய் செலவா?'' ஈரோடு இடைத்தேர்தல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எழுதாத பேனாவிற்கு 81 கோடி ரூபாய் செலவில் சிலை எதற்கு? - எடப்பாடி பழனிசாமி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு இந்த இடைத்தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என்று வலியுறுத்தினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை அதிகரித்து பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எழுதாத பேனாவிற்கு 81 கோடி ரூபாய் செலவில் சிலை எதற்கு என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, அந்த தொகையை மக்கள் நல திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால், திரைத்துறையினர் பெரும் இழப்புகளை சந்தித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, EPS, Erode Bypoll, Erode East Constituency