Poongothai MLA: கட்சி தலைமை கண்டித்ததால் திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை தற்கொலை முயற்சி?

Youtube Video

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், திமுகவினர் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  திமுகவில் மிக முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. முன்னாள் அமைச்சரான இவர், அண்மையில் சில சச்சரவுகளில் சிக்கியதால், திமுக தலைமைக்கழகம் கண்டித்ததாகவும், அதனாலேயே அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன?

  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா. 2006-ஆம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக ஆலங்குளம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், அப்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற இவர், திமுக எம்.பி. கனிமொழியின் தீவிர ஆதவாளராக இருப்பவர்.

  இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே திமுக சார்ந்த கூட்டங்களில் பூங்கோதை கலந்து கொள்வதில்லை என்றும், கட்சி நிர்வாகிகளை பொருட்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை ஒரு சாரர் தொடர்ந்து எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பூங்கோதையின் தம்பியான எழில்வாணன் அருணாச்சலமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

  அமித்ஷா வருகை.. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று ஆலோசனை.

  கட்சிப் பணியில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிவரும் எழில்வாணன், தொடர்ந்து சகோதரிக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் முதல் அனைத்து மட்டத்திலும் பழகி, தனக்கென மிகப்பெரிய நட்பு வட்டாரத்தை வைத்திருக்கும் இவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

  இந்த நிலையில், தென்காசி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் தலைமையில் கடையம் ஒன்றியத்தில் அண்மையில் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்ற பூங்கோதை ஆலடி அருணாவிடம், தனது வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என அப்பகுதி நகரச் செயலாளர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

  அப்போது வெளியூரில் இருந்ததாக பூங்கோதை கூறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் பூங்கோதை ஆலடி அருணா முறையிட்டபோது, கட்சி நிர்வாகிகளின் கேள்விக்கு பதில் சொல்லித் தான் ஆகவேண்டும் என சிவ பத்மநாபன் கூறியுள்ளார்.

  இதனால், கூட்டத்தை விட்டு வெளியேறிய பூங்கோதை, சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்திற்கு வந்து தரையில் அமர்ந்து உள்ளார். அவரை சமாதானப்படுத்த பலர் முயற்சித்த நிலையில், அவர்களின் காலை தொட்டு வணங்கி உள்ளார்.

  மேலும் படிக்க...Karthigai Deepam 2020: திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா.. பக்தர்கள் பங்கேற்கத் தடை..

  இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டதால், பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே நீங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளீர்கள் என மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் கண்டித்துள்ளார். இதையடுத்து, கூட்டத்தை விட்டு வெளியேறிய எம்.எல்.ஏ. பூங்கோதை, ஆலங்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

  இதனிடையே, எம்.எல்.ஏ. பூங்கோதையை திமுக தலைமை கழகம் கண்டித்ததாக கூறப்படுகிறது. புதன் நள்ளிரவு அவர் கூடுதலாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காலையில் அவர் அறையில் மயக்க நிலையில் இருந்ததை பார்த்த குடும்பத்தினர், திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  Ajith | வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜீத்..

  சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்ட பூங்கோதைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு, சுயநினைவுடன் இருப்பதாகவும், அடுத்தகட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் தனியார் மருத்துவமனை கூறியுள்ளது.

  இதனிடையே, நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. பூங்கோதை மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்னை அழைத்து செல்லப்படுகிறார்.  தனது சகோதரருக்கு எதிராக பூங்கோதை ஆலடி அருணா நடத்தும் நாடகம் தான் இந்த தற்கொலை முயற்சி என உள்ளூர் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: