திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது...

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது...

மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியதை அடுத்து, தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. அதைதொடர்ந்து, 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

  தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில், பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி, கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்ட, 7 அம்ச தொலை நோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க... யானை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை: கண்முன்னே காட்டும் சுமதி யானை!  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: